tamilnadu

img

ஜம்முவில் இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டது. 

ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை ஆகஸ்ட் 5ம் தேதி மோடி அரசு ரத்து செய்தது.  காஷ்மீரைமாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என்று  2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. 
மோடியின் இந்த சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க முற்றிலும் ஜனநாயகவிரோதமாக  இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர். 
இந்த நிலையில், தற்போது  ஜம்மு, சம்பா, கதுவா, உதாம்பூர் ஆகிய இடங்களில் 2-ஜி மொபைல் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நிலைமையை ஆய்வு செய்த பின், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. 
 

;